¶ நாங்கள் கண்ட ஒளியின் கதை
இப்படியாக ஆரம்பிக்கிறது ¶
அதிகாலையில்
சிலுவையென சுமந்துவந்த
கான்கிரீட் மின்கம்பத்தை
மந்தையில் மூளிமரமாக நட்டனர்
மின்வாரிய ஊழியர்கள்.
கடுந்தவத்தின் பலனா
சாங்கியங்களின் அதிர்ஷ்டமா
எதுவென மட்டுப்படவில்லை.
இருள் சூழ்கையில்
பிரகாசமான கனியொன்றை
கம்பத்தின் உச்சியில் பழுக்கச் செய்தார் ஊழியரொருவர்.
- முத்துராசா குமார்
Comments
Post a Comment