வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை 2025

தலித் வரலாற்று மாதத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம் ஆண்டுதோறும் 'வானம் கலைத் திருவிழா'வினை மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது. திரைப்படம், நாடக விழா, ஓவியம், புகைப்படக் கண்காட்சியென செழுமையாக நடந்தேறும் இவ்விழாவின் ஒருபகுதியாக 'வேர்ச்சொல் தலித் இலக்கியக் கூடுகை' ஏப்ரல் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. பிற மொழி தலித் இலக்கியங்களையும் உள்ளடக்கி வெவ்வேறு வகைமைகளில் அமைந்த ஒவ்வொரு அமர்வும் செறிவாகவும், நுட்பமாகவும், கற்றலாகவும் இருந்தது. இந்தாண்டுக்கான 'வேர்ச்சொல் தலித் இலக்கிய விருது' எழுத்தாளர் ப.சிவகாமி அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

'யதார்த்த வாழ்வைக் கலையாக்குவதின் அரசியலும் அழகியலும்' என்ற அமர்வில் பங்குபெற்று கலந்துரையாடியதில் மிகுந்த நெகிழ்வும் மகிழ்வும் அடைந்தேன். எனது 'கங்கு' நாவல் மற்றும் எழுத்தாளர் பாரத் தமிழின் 'டாபி' சிறுகதைத் தொகுப்பினை முன்வைத்த இந்த அமர்வினை ஆய்வாளர் சந்துரு மாயவன் நெறியாளுகை செய்தார்.

இயக்குநர் பா.இரஞ்சித், எழுத்தாளர் வாசுகி பாஸ்கர், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த எல்லா தோழர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!

'யதார்த்த வாழ்வைக் கலையாக்குவதின் அரசியலும் அழகியலும்' அமர்வின் காணொளியை காண

மிக்க நன்றிகள் ஸ்ருதி டிவி


மிக்க நன்றிகள் நீலம் சோசியல்

Comments