சென்னை புத்தகக் காட்சி 2025

...பால்பானப் பொங்க
பட்டி பெருக
வாசத்தண்ணீ தெளிக்க
லோகம் பிணியும்
தெருவோடு போக...

எல்லோருக்கும் தைத்திருநாள் நல்வாழ்த்துகள்! 


நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் எனது புதிய சிறுகதைத் தொகுப்பு 'கொடுக்கு' நிறைய நிறைய மனிதர்களிடம் சென்று சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. கங்கு, ஈத்து, கழுமரம், நீர்ச்சுழி, பிடிமண் புத்தகங்களும் நல்ல வரவேற்பு பெற்றன. வாசகத் தோழமைகளுடனான சந்திப்புகள், 'கொடுக்கு' கதைகள் குறித்தும் எனது மற்ற படைப்புகள் பற்றியும் அவர்கள் பகிர்ந்து கொண்ட வார்த்தைகள் பெரும் உற்சாகத்தையும் தொடர்ந்து இயங்குவதற்கான படைப்பூக்க நம்பிக்கையினையும் அளித்தது.

சால்ட் பதிப்பகத்துக்கும், எழுத்தாளர் நரன் அண்ணனுக்கும், சால்ட் பதிப்பகம் நண்பர்களுக்கும், அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் அன்பினையும் பகிர்கிறேன்.


ஜனவரி 12, 2025
நந்தனம் YMCA திடல்
சென்னை

Comments