கடுக்காய் பால்
+
கரும்புச்சாறு
+
சுண்ணாம்புச்சாந்து
+
சுவர்
=
கொத்தனும் சித்தாளும்
ஊசிப்போகாமல் வாழ்கின்றனர்.

[      ]
ஆணியிறங்கிய நெற்றியில்
தொன்மப் புகைப்படங்களை
அவர்களே சுமக்கின்றனர்.
நம்மையே பார்த்தபடியிருக்கும்
உயிரற்ற சட்டக மனிதர்கள்
சுவருக்குள் வசிப்போரிடம் மட்டும்
முதுகினால் பேச்சுக்கொடுத்தபடியே
தொங்குகின்றனர்.



{முத்துராசா குமார் - நன்றி - அரூ இதழ் - சிற்பம் - பெனிட்டா பெர்சியல்}

http://aroo.space/2020/04/08/%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95/

Comments