கூர்முனைகளின் பயன்பாட்டு கண்டுபிடிப்புகளை ஒவ்வொரு ஆளாக இறக்கி வைக்கையில்தான் 
இக்கொலை விழுந்தது. 

'வளர்ப்புச் செங்குளவிகளை அவளின் மீது ஏவிவிட்டு ஏன் குடையச் சொன்னாய்? கர்ப்பிணியாய் இருந்துகொண்டு இப்படியொரு கடுங்கொலையை 
நீ நிகழ்த்தலாமா?'

'பூவுதிராத வெள்ளரி பிஞ்சை 
பிறந்த பெண்சிசுவின் 
குரல்வளையாகப் பாவித்து
அதில் நெற்கூரைப் பதித்து சிரித்தாளவள். ஒவ்வொரு விதைநெல்லின் கூர்களையும் என்னால் மழுங்கடிக்க இயலாது.'


{ முத்துராசா குமார் - 
 ஓவியம் - Javier arizabalo Garcia }

Comments