ஆற்றுவெள்ளத்தில் மிதந்துவந்த 
தேங்காய் குழைகளுக்கு ஆசைப்பட்டு புடைத்தவயிறோடு 
மாண்டவள்தான் என் தாய்.
அவள் கருவினுள்
உயிரசைவுடனிருந்த என்னை
பழவிதையாக நெம்பியெடுத்து
ஆளாக்கினார் தந்தை.
கிறுக்குத்தாயோளி மகனென்ற
கிண்டல் ஒலியை கேட்கையிலெல்லாம், 
வைகையின் நீரடி மணலை
வாலாலேயே வட்டவீடாக்கும் மீன்களைத் தனிமையில் வேடிக்கைப் பார்க்க 
ஆழ மூழ்கிடுவேன்.


{ முத்துராசா குமார் - படம் -  ஜெய்சிங் நாகேஸ்வரன் }

Comments