கைக்கருவிகள் மட்டுமே பிடித்து
கலைவேலைகள் செய்து
வித்தைக்கார தச்சனென
பெரும் பேறெடுத்தவன் நான்.
மரவாடை கமழ்ந்திடும்
ஈக்கிகளாலான என்னுடம்பு
சிற்சிலநாளில் வைரம் பாய்ந்த கட்டையாகிவிடும்.
ஒவ்வொரு முறையும் அவ்வுடம்பை
அறுத்துக்காட்டித்தான்
எச்சில்பீடிகள் கடன் கேட்கிறேன்.
•
{ முத்துராசா குமார் - படம் - நெல்சன் விஜி }
Comments
Post a Comment