எண்ணமுடியாத மழைத்துளிகள்
எண்ணமுடியாத தீக்குச்சிகள்.
ஒவ்வொருத் துளிக்கும் நேராக
ஒவ்வொருத் தீக்குச்சியை ஊன்றி 
பற்ற வைக்கிறேன்.
நெளியும் கூர் சுடர்களை
மழைக்குடிக்கும் கொழுந்திலைகளாக
புத்திப்பிறழ்வு பாவிக்கிறது.


{ முத்துராசா குமார் - படம் - Denis Dailleux }

Comments