{ ரோமக்கட்டு }

தேங்காய் எண்ணெயில் 
மூலிகைவேர்கள் ஊறிடும் 
மூடிகளற்ற சீசாக்கள் 
விதவித வடிவில் நிறையவுண்டு.
அனாதை சிசுக்களின் 
நோஞ்சான் சவங்களை
சீசாவினுள் முங்கிடச்செய்வேன்.
சிசுக்களின் இளவோட்டுத் தலையில் 
பச்சை முளைவிட்டவுடன்
எண்ணெய் பூசித் திளைப்பேன்.


[முத்துராசா குமார்  - படம் - Abul Kalam Azad Pattanam]

Comments