இந்தத் தள்ளாட்டத்திலும்
நாவு குளறாமல்
கல்லுரலை உடுக்கை மாதிரி
நொட்டாங்கரத்தில் தூக்கி ஆடுகிறாளே
கலயத்தில் என்ன வகை
சாராயவஸ்தை நிரப்புகிறாள்.
வடியும் வாநீரோடு தவழும்
அவளது பருவமகளின்
ஊமைக் கண்ணீரை
வெங்கல அண்டாக்களில் பிடித்து
கலந்தடிப்பாள்.
தவிர, சாராயத்தை நாம்
தொண்டைவழி இறக்குகிறோம்.
அவளோ நேரடியாக ஈரக்கொலையில் ஊற்றி எரியவிடுவாள்.
•
{ முத்துராசா குமார் - படம் - Abul Kalam Azad Pattanam }
Comments
Post a Comment