*துல்கல் புத்தக உரையாடல் - 5*

*புத்தகம்* : பிடிமண் - கவிதை தொகுப்பு
*ஆசிரியர்* : முத்துராசா குமார்
*உரையாடுபவர்* : கார்த்தி

"நகரமயமாக்கலால் நிலம்பெயர்ந்து மரபுமறதிக்கு உள்ளானவர்களை 
பூர்வீக தொல்நினைவுகளுக்குள் 
பின்னோக்கி இழுக்கும் சொல்சிகிச்சை. வழிநடைக் கதைகளையும் வாழ்குடிகளின் சரிநிகர் துள்ளல்களை துன்பியல்களை பாடித்தீர்க்கும் முதுபாணனின் பாடல்களைப்போல, தெற்கத்திய நிலம்நின்று  அச்சூழ்நிலை உயிர்களையும் இக்காலநிலை மிச்சங்களையும் தேடித்தேடி எழுதியிருக்கும் மரபுசார் மூலிகைத்தேடல் குறிப்புகள்.இப்பிடிமண் கவிதைகள்.

காட்டுப்பன்றியின் பிறைபல்லால் கிழங்ககழும் பழங்குடியின் கைகள் சிறுகீறலுமில்லாது மேலெடுப்பதைப்போல, படிந்திருக்கும் ஆழ்ந்த ஞாபகங்களை, வாசித்தாவது வாழ்ந்துதிரும்புவதற்கான ஊர்வாசனையை மேலெழுப்பித் தரும் முக்குளிப்பானின் மூச்சடக்குதல்கள் முத்துராசா குமாரின் படைப்புகள்."

- கார்த்தி
   
*Date* :  July 4 ( Saturday )
*Time* : 7.00 PM - 8.30 PM

 *To Join:*
Meeting link:
https://meetingsapac21.webex.com/meetingsapac21/j.php?MTID=m3bcabf328ec8fe17a814c03d2870bff9

Meeting number:
166 121 1698

Password:
Dulkalbooktalk5

#Dulkal_Book_Talk

மிக்க நன்றியும் அன்பும் தோழர்! Karthi PS

Comments