உத்திரக்கட்டைகள்
நெஞ்சுக்கூடு
கழிவறையின் கால்மிதி கற்கள்
| | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | | |
வரிவரியான இடைவெளிகளை
குழப்பிக்கொள்வதில் விருப்பமென்பதால் என்னை நானே 
கிறுகிறுக்கச் சுழற்றி விளையாடுவேன்.
கால்கள் விறைக்க இறந்திருக்கும்
மைனாவினைப் போன்று 
கபால நீர் அலம்ப மல்லாந்திருப்பேன்.
எழும்ப முடியா கதியில்
தள்ளாடி நிற்கையில்
உத்திரக்கட்டைகளின் நடுவில் 
இருதயம் அசைவுறும்.
நெஞ்சுக்கூட்டில் தாலாட்டுத் தொட்டிலின் கொக்கி தொங்கும்.
ரெண்டாகப் பிய்க்கப்பட்ட ரயில்கள் 
கால்மிதி கற்களில் ஓடும்.

• •

{முத்துராசா குமார்}

Comments