தாயிடம் திரும்பல்



உடலெங்கும் பச்சைக் குத்திய
வியத்தகு சித்திரங்கள்
வயோதிகத்தில் ஒவ்வாது போகலாம்.
அரணை குட்டியின் வால்
ஓடும் கங்கு • மிருது தழல்
இச்சூட்டால் சித்திரங்களை 
வலிக்காது பொசுக்கி 
மழலையின் செந்தோல் மாதிரி ஆக்கிடலாம்.
பிறகு, நமக்கு நாமே 
ஒரு தாயாக மாறி
குதிரையின் முன்னெத்தி போல
வகிடெடுத்து தலை சீவலாம்.


தளுகை - எழுத்தாளர் Bavachelladurai Bava


{முத்துராசா குமார்` படம் `Nasuril Islam}

Comments