'நீர்ச்சுழி' கவிதைகள்
நண்பர்களுக்கு வணக்கம்,
சால்ட் • தன்னறம் வெளியிடும் 'நீர்ச்சுழி' என்ற எனது புதிய கவிதைத் தொகுப்பு அச்சாகி வெளிவந்திருப்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி!
புத்தகத்தினை வெளியிடும் சால்ட் • தன்னறத்திற்கும், எழுத்தாளர் நரன் அவர்களுக்கும், குக்கூ காட்டுப்பள்ளி சிவராஜ் அவர்களுக்கும், விற்பனை உரிமை தமிழ்வெளி கலாபன் அவர்களுக்கும், நீர்ச்சுழி கவிதைகளைப் படித்து வாழ்த்துச் சொற்கள் வழங்கிய 'மணல்மகுடி' நாடகநிலத்தின் இயக்குநர் ச.முருகபூபதி அவர்களுக்கும், புகைப்படக்கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும், ஓவியர் ப்ரவேகா அவர்களுக்கும், வடிவமைப்பாளர் மகேஷ் அவர்களுக்கும், பிழைகள் திருத்திய ஆசிரியர் மகாலெட்சுமி அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகளையும், அன்பினையும் அகத்திலிருந்து உரித்தாக்குகிறேன்!
'நீர்ச்சுழி' முதல் பிரதிகளை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வாழ்த்துகள் வழங்கிய எழுத்தாளர் நரன், குக்கூ சிவராஜ், ஓவியர் சூசன், எழுத்தாளர் வெய்யில், எழுத்தாளர் அனுராதா ஆனந்த், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், ஊடகவியலாளர் முரளிதரன், தமிழ்வெளி கலாபன், ஓவியர் ப்ரவேகா, தோழமைகள் ப்ரவீன் மற்றும் தினேஷ்ராஜா ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றிகளும் அன்பும்!
தவிர, 'நீர்ச்சுழி' கவிதைகள் வெளிவர சிறியதாகவும், பெரியதாகவும், எல்லாவிதத்திலும் அகமாகவும், புறமாகவும், அருகிலிருந்தும், எட்டத்திலிருந்தும் உதவி ஊக்கமளித்த ஒவ்வொரு தோழமையுறவுக்கும் என்றைக்குமான நன்றிகளும் அன்பும்!
வாழ்த்துகளைப் பகிரும் தோழமைகள் அனைவருக்கும் அன்பின் நன்றிகள்!
கவிதைகள் - நீர்ச்சுழி
வெளியீடு - சால்ட் • தன்னறம்
விற்பனை உரிமை/நீர்ச்சுழியைப் பெற -
+91 90 9400 5600 தமிழ்வெளி
•
முத்துராசா குமார்
25.12.2020 வெள்ளி
•
🌻🌾🌺
Comments
Post a Comment