கவிதை • ஊருணி


{ஊருணி}

ஊர்ந்திடும் 
தொத்தல் பயலெனச் சொல்லி 
ஆட்டையில் சேர்ப்பதில்லை என்னை.
சினைக்குட்டிகளோடு 
ஈத்தில் மரித்த நாயின் கண்களால் 
எனது கொழுந்திலை 
கால்களைப் பார்ப்பேன்.
அவற்றை நீவிடுவது
அல்லியூருணி மட்டுமே.
சுனைகள் மூடப்பட்டு கொலையுண்ட
ஊருணியின் சவத்தை
பீர்க்கங்கூடால்
தேய்த்து உசுப்புகிறேன்.
பழைய நாளில் செய்த 
சுருக்குக் கண்ணியில்
சிக்கியுள்ளது தைலாங்குருவி.
ஊருணிதான் குருவி ரூவத்தில்
கழுத்திறுகி கால்கள் உதற
செத்துக் காட்டுகிறது.
நாக்கறுந்த
கோயில்மணிக் கொத்தாய்
கிடக்கிறேன்.


{முத்துராசா குமார் ` சிற்பம் ` தீபி 
 நன்றிகள் ` சீர் இதழ்}

Comments