கவிதை • வெறி
{வெறி}
அருளேறிய கடியில்
துண்டமாகவுள்ள சேவலுக்கு
அரிசியள்ளி வைக்கிறாள்
பட்டுச்சிறுமி.
மயானக்கொள்ளையின்
அங்காளம்மனாகத் தெரிந்த
அவளின் முன்னால்
ரத்த வாயுடன்
கும்பிட்டு உருள்கையில்
சேவலின்
துடிக்கும் கொண்டையெடுத்து
எனைக் கொத்தவிடுகிறாள்.
•
{முத்துராசா குமார் ` நிழற்படம் ` Sarathi Thamodaran ` நன்றிகள் ` சீர் இதழ்}
Comments
Post a Comment