கவிதை


நிலா மங்கிய நாளில்
வெள்ளரிப்பிஞ்சுகள் களவாங்க
கம்மா கொடிகளுக்குள்
சாக்கோடு நெளிந்தேன்.
தப்பிக்கையில்
இடத்துப் பெரியாம்பளையிடம்
ஆம்பட்டேன்.
எனது எளுறுக்கு
புகையிலைக் கொடுத்து
தனது களவுச்சரிதங்களை
நடுக்கமெடுத்து வாசித்தார்.
விடிந்து வழியனுப்புகையில்
வெடித்த வெள்ளரிப்பழத்தை
கோரைப் படுக்கையிலிட்டு
கைக்குழந்தையாக தந்தவர்
விதைகளை மட்டும்
வழித்துக் கொண்டார்.

°°

{தமிழ்வெளி இதழில் வெளிவந்துள்ள கவிதைகளிலிருந்து • முத்துராசா குமார் • படம் •  Suba • நன்றி • தமிழ்வெளி இதழ்}

Comments