கவிதை


புதுமண்டபத்து மரச்சாமான்களில்
உலைவைத்துத் தின்று
காளானை மரமாக்கி 
தூரைச் சுற்றி விளையாடும் பிள்ளைகள்
நீர்மாலை வேட்டியை
மந்திரப்பாயாய்
பறக்கவிடுகின்றனர்.
ஆலம்பழங்களைக் குன்றுகளாக
உருட்டுகின்றனர்.
மண்ணுக்குள் நரி பிடித்து
வளர்க்கின்றனர்.
வெடிதேங்காயின் 
முக்கண்ணைத் தோண்டி
சர்க்கரைப் பொறிகடலையுடன்
உள்ளேயிறங்கி
இனிப்பாய் சிதறி சிரிக்கின்றனர்.
முள்ளில் படுத்தபடி 
நடப்பதை ரசிக்கிறது
பறவையை முழுங்கிய 
பாம்புச்சட்டை.


{முத்துராசா குமார் ` நன்றிகள் ` தமிழ்வெளி இதழ்}

Comments