கவிதை ~ தொத்து


கிருமியால் பாழடைந்த ஊரில்
நான் மட்டுமே உயிர்மிச்சம்.
அழி கம்மாயின் 
மீன்பிடித் திருவிழாவில்
கடுகாய் எம்பும்
எல்லா மீன்களையும்
பஞ்சாரத்துக்குள் அள்ளுகிறேன்.
தோட்டிக்காசுக்கு
அடிக்கவந்த ஊரை
மீன்களின் பித்தப்பையால்
கசப்பாக்குகிறேன்.
மாரிக்காலத்தில்
கம்மா பிளவில்
மீன் முட்டைகள் பூப்பதே
எனக்கானப் பண்டிகைநாள்.


{முத்துராசா குமார் ` படம் ` Denis Dailleux ` நன்றி ` தமிழ்வெளி இதழ்}

Comments