நீர்ச்சுழி - கலந்துரையாடல்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் & பண்பாட்டு ஆய்வுகள் துறையின், ஆய்வாளர் மன்றம் நடத்திய 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்புக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடந்து முடிந்தது.
Google Meetல் இரண்டு மணிநேரம் வரை உரையாடல்கள் நிகழ்ந்தன. 'நீர்ச்சுழி' மட்டுமின்றி 'பிடிமண்' கவிதைத் தொகுப்பு பற்றியும் பகிர்தல்களும், கேள்விகளும் இருந்தன. இரண்டு கவிதைத் தொகுப்புகளில் உள்ள பாடுபொருட்கள், தன்மைகள், வெளிப்பாட்டு முறைகள், நாட்டாரியல் கூறுகள், நவீன கவிதையாக உருபெரும் தருணங்கள், படைப்பு மனம் அதன் சுயம், இரண்டு கவிதை நூலின் வடிவமைப்புகள் என்று பலவாறான விஷயங்கள் நுட்பமாகவும், ஆய்வியல் நோக்கிலும் முன்வைக்கப்பட்டன.
மனதுக்கு மிகுந்த உற்சாகமாகவும், நம்பிக்கையாகவும், கற்றலாகவும் அமைந்த இந்நிகழ்வில் கலந்துகொண்ட எல்லாத் தோழமைகளுக்கும், ஆய்வாளர் மன்றத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
(4-9-21 சனிக்கிழமை மாலை 5 மணி)
Photo • Suba
Comments
Post a Comment