கவிதை


ப்ளாட்டு புதர்களின் 
துத்திப்பூக்களில் தொங்கும் தீட்டுத்துணிகளை 
வாரிக்குவித்து எரிக்கின்றனர் 
எனது வீட்டின் தலைமுறை ஆண்கள்.
சொக்கப்பனையாய் சடசடக்கும் 
அந்நெருப்பின் புகை 
கண்களை மறைக்கிறது.
வாடை மூச்சடைக்கிறது.
நேற்றைய இரவின் 
இந்த சொப்பனம்
எதுக்கான சகுனம்.

••

{முத்துராசா குமார் ` படம் ` Suba ` நன்றி ` தமிழ்வெளி இதழ்}

Comments