CYANOTYPE WORKSHOP
CYANOTYPE அச்சு
புகைப்படக்கலைஞர்கள் வினோத் பாலுச்சாமி மற்றும் சுபா அவர்களுடைய கற்பித்தலில் மதுரையில் இரண்டு நாட்களாக CYANOTYPE WORKSHOP மிகச்சிறப்பாக நடந்தது. இரண்டாம் நாளில் மட்டுமே கலந்துகொண்டேன்.
கீழக்குயில்குடி சமணர் படுகை இருள்குகையினுள் நான் தேர்ந்தெடுத்த எரிதிரி, பத்திகள், உலர்மல்லி சரத்தை Cyanotype அச்சில் வார்ப்பதை வரிசை நுட்பாக கற்றேன். கலவை அமிலங்கள் தடவப்பட்ட மெதுதாளில் ஒவ்வொரு பொருளாக வைத்து, அதன் மீது கண்ணாடியடைத்து வெயிலிடம் மல்லாத்துகையில் சூரியன் அதனோடு வினைபுரிய இயற்கையின் முன் காத்திருந்தேன்.
பிறகு, நீரிலும் அமிலத்திலும் கொடியறுத்த சிசுவாக அதனை முக்கி மென்மையாக அலசுகையில் கணிக்காத வடிவங்கள் அச்சாகி உருவேறிய தருணங்கள் பெரிய ஜாலங்களை மனதுள் நிகழ்த்தின.
இதேபோல புகைப்படங்களை கறுவெள்ளையாக்கி மேலுள்ள படிநிலைகளின் வழியே அச்சாக்குகையில் கிடைத்த சித்தர அனுபவம் மகிழ்ச்சிப்பூர்வமாக இருந்தது.
சுற்றத்தின் ஒவ்வொரு பொருட்களோடும் உரையாட வைத்து காலவுறைதலுக்குள் Cyanotype கூட்டிச் சென்றது. பயிற்சியில் கலந்துகொண்ட தோழமைகளோடு நடந்த கூட்டான கற்றல் பரிமாற்றங்கள் புத்துணர்வாக அமைந்தன.
எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!
• முத்துராசா குமார்
அக்டோபர் 19, 20 - 2021
செவ்வாய், புதன்
Comments
Post a Comment