கவிதை

இளங்கொடிப் பொட்டணத்தை
தண்டட்டிகளாக மாட்டியிருக்கும்
ஆலமரத்தை 
கடித்துக் குதறுகிறது 
பித்துநாய்.
செவிமடலின் வெறியுண்ணிகள்
ஓங்காரமிட்டு 
பித்தை
உருவேத்துகின்றன.
இன்னும் ஒரு கடிக்கு
இருள்வேர் 
வெளிச்சம் பார்த்துவிடும்.
உச்சி ஆலங்கனி
நாயின் நெற்றிச்சரிவில் விழுந்து 
குளிராக சிதற
பால்குடியில் உறங்கும்
சிசுக்களாக அமந்தன
உண்ணிகள்.
வாலாட்டலின் காற்றுக்கு
காயமாற்றிக் கொள்கிறது
மரம்.


{கவிதை • படம் • முத்துராசா குமார்}

Comments