ஈத்து - திறனாய்வுக் கூட்டம்

மதுரையில் 'ஈத்து' சிறுகதைத் தொகுப்புக்கான திறனாய்வுக் கூட்டம் வெகுசிறப்பாக நடந்தேறியது!

Madurai Arts Discourse (MAD) Madurai International Centre for Arts (MICA) ஒருங்கிணைப்பில் நடந்த 'ஈத்து'க்கான திறனாய்வு நிகழ்வில் இருபத்தைந்துக்கும் மேற்பட்டத் தோழமைகள் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியிலிருந்து எழுத்தாளர் கோணங்கி அவர்களின் திடீர் வருகை எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியைத் தந்தது. ஈத்தைப் பற்றிய கையெழுத்துப் பிரதிக் குறிப்புகளோடு கிட்டத்தட்ட இரண்டுமணி நேரம் சுழலாக பேசினார்.

கதைகள் குறித்தான தங்களின் வாசிப்பனுபவ பார்வைகளையும், கருத்துகளையும் பத்துக்கும் மேலானோர்
முன்வைத்தனர். ஈத்தின் மீதான ஒவ்வொருவரின் வார்த்தைகளும், பகுப்பாய்வுகளும், கலந்துரையாடல்களும்
மனதுக்கு மிகுந்த நம்பிக்கையினையும், கற்றல்களையும் அளித்தன. ஒட்டுமொத்த நிகழ்ச்சியும் Podcastல் பதிவுசெய்யப்பட்டது. MAD - MICA வாயிலாக விரைவில் சமூக வலைதளங்களில் பதிவேற்றப்படவுள்ளது.

இந்த திறனாய்வுக் கூடல் அடுத்தடுத்தப் பயணத்துக்கான உற்சாக ஊக்கத்தையும், சந்தோஷத்தையும் அளித்திருக்கிறது. MAD - MICA க்கும், எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கும், உரையாற்றிய தோழமைகளுக்கும், நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து தோழமைகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!

{முத்துராசா குமார் - ஏப்ரல் 10 - 2022 ஞாயிறு}

நிழற்படங்கள் - புகைப்படக்கலைஞர் ஸ்ரீதர் பாலசுப்ரமணியம்

📝🍁♥

Comments