விரிவும் ஆழமும் தேடி • எனது 'பிடிமண்' 'நீர்ச்சுழி' 'ஈத்து' படைப்புகளை முன்வைத்து கலந்துரையாடல் நிகழ்வு


ஈத்து - நீர்ச்சுழி - பிடிமண் கலந்துரையாடல் நிகழ்வு!

'விரிவும் ஆழமும் தேடி' அமைப்பினருக்கு மனமார்ந்த நன்றிகள்!

எனது 'பிடிமண்' 'நீர்ச்சுழி' கவிதைத் தொகுப்புகள் மற்றும் 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து, 'விரிவும் ஆழமும் தேடி' நண்பர்கள், ஜூன் 26, 2022 ஞாயிறன்று ராசபாளையத்தில் கலந்துரையாடலை நடத்தினர். இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கூடுகையில் இருந்தனர்.

மிகச்சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்வில் கவிதைகள், கதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள் குறித்தும் தங்களின் விரிவான வாசிப்பனுபவங்களையும், 
நுட்பமான கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.
கேள்விகளுடனான கலந்துரையாடல்களும் செறிவாக அமைந்தது. நுண்வெளி கிரகணங்கள், சுதந்திரச் சிந்தனை தொகுப்பு மலர் புத்தகங்களை அன்பின் நினைவுப்பரிசாகப் பெற்றுக்கொண்டேன்.

ஒட்டுமொத்த தருணங்களும் 
மிகுந்த உற்சாகத்தையும், நம்பிக்கையினையும், கற்றலையும் கொடுத்தன. எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!


Comments