'கல்குதிரை' இதழில் 'ஈத்து'
'கல்குதிரை' இதழில் 'ஈத்து'
வையை நீர்ப்பழங்குடிகளின் 'ஈத்து' ஓலைக் கதைகள் • கோணங்கி
கல்குதிரையின் கார், இலையுதிர், முன்பனிக்காலங்கள், வேனிற்காலங்களின் இதழ்கள் (34,35 - 2022) சமீபத்தில் வெளியாகி உள்ளன. எழுத்தாளர் கோணங்கி அவர்கள், எனது ஈத்து சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து "வையை நீர்ப்பழங்குடிகளின் 'ஈத்து' ஓலைக் கதைகள்" என்ற தலைப்பில்,
கல்குதிரையில் மிக விரிவான, அடர்த்தியான வாச்சியம் எழுதியுள்ளார்.
MADURAI ARTS DISCOURSE (MAD) MADURAI INTERNATIONAL CENTRE FOR ARTS (MICA) நண்பர்கள், 'ஈத்து'க்கான கலந்துரையாடல் நிகழ்வினை, கடந்த ஏப்ரல் 10ம் தேதி மதுரையில் நடத்தினர். வெகுசிறப்பாக நடந்த அந்நிகழ்வுக்கு கோணங்கி அவர்களின் எதிர்பாராத வருகை எல்லோருக்கும் மிகுந்த மனமகிழ்வை தந்தது. காகிதக்குறிப்புகளோடு
ஈத்து பற்றிய தனது வாசிப்பனுபவங்களையும், கருத்துகளையும் உளமார்ந்து பகிர்ந்து கொண்டார்.
தமிழின் மூத்த படைப்பாளர்களில் ஒருவரான கோணங்கி அவர்களுடைய வாச்சியமும், உரையும் தொடர் பயணத்துக்கான பெரும் உத்வேகத்தையும், உற்சாகத்தையும் அளிக்கிறது. கல்குதிரைக்கும், எழுத்தாளர் கோணங்கி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
- முத்துராசா குமார்
Comments
Post a Comment