வாகை இலக்கியக் கூடல்
கவிஞர் கண்டராதித்தன் அவர்களின் 'பாடிகூடாரம்' கவிதைத் தொகுப்பு மற்றும் எனது 'ஈத்து' சிறுகதைத் தொகுப்புக்கான அறிமுகக் கூட்டத்தை வாகை இலக்கிய கூடல் தோழமைகள், மயிலாடுதுறையில் ஜூலை 3, 2022 ஞாயிறன்று மிகச்சிறப்பாக நடத்தினார்கள்.
தோழர் விசாகன் அவர்கள் பாடிகூடாரம் குறித்தும், தோழர் செந்தில் ஜெகன்நாதன் அவர்கள் ஈத்து குறித்தும் தங்களுடைய வாசிப்பனுபவங்களை, கருத்துகளை மிக விரிவாக பகிர்ந்து கொண்டனர்.
மிக இனிமையாக அமைந்த இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த வாகை இலக்கியக் கூடலுக்கும், தோழர் முருகதீட்சண்யா உள்ளிட்ட தோழமைகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் அன்பும்!
Comments
Post a Comment