Laadli ஊடக விருது 2022 • கிருத்திகா சீனிவாசன்
சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகாவில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட ஐந்து காவலர்கள் பொய்யான திருட்டு வழக்கில் இருளர் பழங்குடி ஆண்களை கைது செய்து, அவர்களின் குடும்பத்தைச் சார்ந்த நான்கு பெண்களைக் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மேலும் கைதான ஆண்களை காவல்நிலையச் சித்ரவதை செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சம்பவங்கள் தொடர்பாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் 2021-ல் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. பாதிக்கப்பட்ட இருளர் பழங்குடி பெண்களுக்கும், பொய்வழக்கில் கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளான இருளர் பழங்குடி ஆண்களுக்கும் ஒரு மாதத்தில் உரிய இழப்பீடு தரவேண்டியும், மூன்று மாதத்திற்குள் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியும், இவ்வழக்கின் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டியும் தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறை தலைவருக்கும் கடந்த வருடம் ஆணையம் உத்தரவிட்டது.
••
இந்த வழக்கு பத்து வருடமாகியும் நீதிமன்றத்தில் வழக்காடப்படாமல் இருப்பது குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை குறித்தும் கிருத்திகா சீனிவாசன் எழுதியிருந்த செய்திக்கட்டுரைக்கு, இந்தியளவில் ஊடகத்துறையில் வழங்கப்படும் LAADLI Jury Appreciation Citation - 2022 கிடைத்திருக்கிறது!
இருளர் பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்ட காவல்துறை பயங்கரவாதம், இவ்விருதின் வழியாக
இந்தியாவெங்கும் தெரியட்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் தார்மீக உரிமைப்படி வழக்கு நடக்க வேண்டும்.
உனது இதழியல் பயணம் மென்மேலும் சிறக்க நெஞ்சார்ந்த அன்பும் வாழ்த்துகளும் கிருத்தி!
••
கட்டுரையை வாசிக்க
Comments
Post a Comment