மலையாளத்தில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்
மலையாளத்தில் வெளிவந்துள்ள எனது கவிதைகள்!
'கழுமரம்' என்ற தலைப்பில் எனது மூன்று கவிதைகள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, கேரளாவின் Truecopy THINK இணைய இதழில் வெளிவந்துள்ளன. கவிதைகள் வாசிக்கப்பட்டு Audio வடிவிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கவிதைகளை தமிழிலிருந்து மலையாளத்திற்கு உயிர்ப்பாய் மொழிபெயர்த்து, வாசித்திருக்கும் தெய்வேந்திர குமாருக்கும், Truecopy THINK இதழுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!
சுயாதீன ஆய்வாளராக இயங்கிவரும் தெய்வேந்திர குமாரின் ஆய்வுக்கட்டுரைகள் SAGE, Springer உள்ளிட்ட சர்வதேச ஆய்விதழ்களில் வெளிவந்திருக்கின்றன. தெய்வேந்திர குமாரின் ஆய்வுகள் மற்றும் மொழிபெயர்ப்பு பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள்!
கவிதைகளை வாசிக்க கேட்க
Comments
Post a Comment