'ஈத்து' சிறுகதைத் தொகுப்பு ஒரு வருடம்
{ ஈத்து } சிறுகதைத் தொகுப்பு
ஒரு வருடம்!
கடந்த வருடம் டிசம்பர் 19ம் தேதி, Madras Literary Society நூலகத்தில் எனது முதல் சிறுகதைத் தொகுப்பு 'ஈத்து' வெளியிடப்பட்டது.
இயக்குநர் P.S வினோத்ராஜ் அவர்கள் ஈத்தை வெளியிட, எழுத்தாளர், ஊடகவியலாளர் ஜெயராணி அவர்கள் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்கள் ஈத்து கதைகள் குறித்து உரையாற்றினார்.
எல்லோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், அன்பினையும் பகிர்கிறேன்.
பலதரப்பட்ட தளங்களில், கலை வடிவங்களில் 'ஈத்து' கதைகள் குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளும், கட்டுரைகளும், பகிர்தல்களும், பதிவுகளும், கருத்துகளும், அங்கீகாரங்களும் தொடர்ந்து இயங்குவதற்கான பெரும் ஊக்கத்தினையும், மகிழ்ச்சியினையும் இந்த ஒருவருடத்தில் தந்திருக்கிறது. தந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தோழமைக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும், அன்பினையும் பகிர்ந்து கொள்கிறேன்.
ஈத்தை வெளியிட்ட சால்ட் & தன்னறத்திற்கும், புத்தக உருவாக்கத்தில் பங்களித்த அனைவருக்கும் என்றைக்குமான எனது மனமார்ந்த நன்றிகளையும், அன்பினையும் பகிர்ந்து கொள்கிறேன்.
9 சிறுகதைகள் கொண்ட 'ஈத்து' தொகுப்பை 'கரம்பைக்கும், எருசாம்பலில் துடித்திருக்கும் வெள்ளரி விதைகளுக்கும்' தளுகையிட்டுள்ளேன்.
•
ஈத்து வெளியீட்டு நிகழ்வில்
எழுத்தாளர் என்.ஸ்ரீராம் அவர்களின் உரை
இயக்குனர் P.S. வினோத்ராஜ் அவர்களின் பகிர்தல்
எனது சிறு பகிர்தல்பகிர்தல்
Comments
Post a Comment