'ஈத்து' சிறுகதைத் தொகுப்பில் வரக்கூடிய 'பொம்மைகள்' கதை சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில்!


நண்பர்களுக்கு வணக்கம்,

எனது 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பில் வரக்கூடிய 'பொம்மைகள்' எனும் கதை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இளங்கலைப் பாடத்திட்டத்தில், மாணவர்களுக்கான பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் & தொடர்பியல் துறையில்தான் M.A,MPhil பயின்றேன். எழுதிய படைப்பு படித்த பல்கலையில் பாடமாகியிருப்பது ஒருவித நெகிழ்ச்சியாக உள்ளது.

மிக்க நன்றிகள்!

♥🌻📝



Comments