அகில இந்திய வானொலி நேர்காணல்
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் & தொடர்பியல் துறையில் M.A,Mphil படித்துக் கொண்டிருந்தபோது நானும், வகுப்பு நண்பர்கள் சிலரும் அகில இந்திய வானொலியின் (AIR) 'இளைய பாரதம்' நிகழ்ச்சியில் பகுதி நேரமாக பணி புரிந்தோம். நேர்காணல்கள், கவிதைகள், கட்டுரைகள், கதைகள் வாசிப்பே அந்நிகழ்ச்சி.
சமுத்திரத்திற்கும், பழங்கால கட்டிடங்களுக்கும் நடுவே நீளும் கடற்கரைச் சாலையில் கால்நடையாக வகுப்பிலிருந்து வானொலி நிலையத்திற்கு போய் வந்த நாட்களும், பொழுதுகளும் என்றென்றும் மனதுக்கு இனியவை. அதே வானொலி நிலையத்தில் கவிஞராக, எழுத்தாளராக நேர்காணல் கொடுத்திருப்பது மிகுந்த நெகிழ்ச்சியாகவும், ஞாபகச் சுனையாகவும் இருக்கிறது.
'இலக்கியம் பேசுவோம்' நிகழ்ச்சிக்காக எனது 'கங்கு' நாவல், 'ஈத்து' சிறுகதைத் தொகுப்பு, 'பிடிமண்' 'நீர்ச்சுழி' 'கழுமரம்' கவிதைத் தொகுப்புகளை முன்வைத்து உரையாடல் நடந்தது.
'இலக்கியம் பேசுவோம்' நிகழ்ச்சி குழுவினருக்கு மிக்க நன்றிகள்!
Comments
Post a Comment