கங்கு நாவல் வெளியீடு & திறனாய்வு நிகழ்வு
மதுரையில் 'Reader's Desk' ஒருங்கிணைத்த 'கங்கு' நாவல் வெளியீடு & திறனாய்வு நிகழ்வு மிகச் சிறப்பாய் நடந்தேறியது. கவிஞர் லிபி ஆரண்யா அவர்கள் நாவலை வெளியிட, எழுத்தாளர் பா.திருச்செந்தாழை அவர்கள் பெற்றுக்கொண்டார். 'கங்கு' குறித்தான பேராசிரியர் பா.ச.அரிபாபு அவர்களின் அறிமுக உரை, எழுத்தாளர் - ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் திறனாய்வு உரை மிக விரிவுடனும், செறிவுடனும் இருந்தது. அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்!
நிகழ்வில் கலந்துகொண்ட எல்லா தோழமைகளுக்கும், Reader's Desk நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்!
கங்கினை வெளியிட்ட சால்ட் பதிப்பகத்துக்கும், எழுத்தாளர் நரன் அண்ணனுக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்!
Comments
Post a Comment