அரசுப் பள்ளி நூலகம் திறப்பு - சென்னை

சென்னை பரணிபுதூர் அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவ நூலகத்தை திறந்து வைக்கும் வாய்க்கும் அமைந்ததில் அரசுப் பள்ளியில் படித்த மாணவனாக என் மனதுக்கு மிகுந்த நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியுமாய் உள்ளது.

எழுத்தாளர் யூமா வாசுகி அவர்கள் எழுதிய 'தேநீர் குடில்' (தன்னறம் நூல்வெளி) புத்தகத்தைப் பற்றியும், அதன் கதையினையும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டேன். புத்தகங்கள், வாசிப்பின் முக்கியத்துவம், நூலகம் குறித்து மாணவர்களிடம் உரையாட இக்கதை மிகச்சரியாகவும், உணர்வுப்பூர்வமாகவும் இருந்தது. கதையில் மாணவர்கள் ஆத்மார்த்தமாக ஒன்றிப்போனார்கள். சிறு தயக்கம், மௌனத்திற்கு பிறகு மாணவர்களில் ஒவ்வொருவராக எழுந்து தங்களுக்குப் பிடித்த, கேட்ட, எழுதிய, எழுதப் போகும் கதைகளை வெள்ளந்தியாய் பகிர்ந்து கொண்டது நிகழ்வின் மனநிறைவாக இருந்தது.

மனமார்ந்த நன்றிகள் • மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள், MADRAS SCHOOL OF SOCIAL WORK, PG DEPARTMENT OF SOCIAL WORK தோழமைகள்.

மார்ச் 7, 2024

Comments