நூல் நயம் • குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தஞ்சாவூர்
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, தமிழ்த்துறையின் 'நூல் நயம்' நிகழ்வில் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. மாணவர்களில் சிலர் தாங்கள் வாசித்த படைப்புகள் பற்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்ட விதமும், கருப்பொருட்களும் தனித்துவமாக இருந்தன.
வாசிப்பு பற்றி, எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் அவர்களின் 'நந்தனார் தெரு மற்றும் சில கதைகள்' (கருப்பு பிரதிகள்), எழுத்தாளர் சி.எம்.முத்து, எழுத்தாளர் தேன்மொழி ஆகியோரின் படைப்புகள் பற்றி பகிர்ந்து கொண்டேன். பெண்கள் எழுத வேண்டிய அவசியம் குறித்தும், அவ்வெழுத்துகளின் வீரியம் குறித்தும் தனது இதழியல் களப்பணி அனுபவங்களிலிருந்து கிருத்தி பேசியது மாணவர்களிடம் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியதை நன்கு உணர முடிந்தது.
மாணவர்களின் பெருந்திரள் கூடுகை, கலந்துரையாடல்கள் மனதுக்கு நிறைவாகவும், கற்றலாகவும் அமைந்தது.
கந்தர்வன் கதைகள், மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் (சீர் வாசகர் வட்டம்) நினைவுப்பரிசுகளாக வழங்கப்பட்டன.
மாணவர்கள், கல்லூரி முதல்வர், தமிழ்த்துறையின் தலைவர், பேராசிரியர்கள், கவிஞர் - பேராசிரியர் ம.கண்ணம்மாள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்!
Comments
Post a Comment