எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் நினைவு விருது

விழுப்புரம் மருதம் நிகழ்வில் எழுத்தாளர் விழி.பா.இதயவேந்தன் நினைவு விருது பெற்றதில் மிக்க மகிழ்ச்சி!

முனைவர் சற்குணம் அவர்களின் தலைமையில் கவிஞர் அறிவுமதி அவர்களும், இயக்குநர் எழில் பெரியவேடி அவர்களும் நினைவு விருது, பரிசுத்தொகையினை வழங்கினர். முன்னதாக கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி அவர்கள் எனது படைப்புகள் குறித்தான அறிமுக உரையை வழங்கினார்.

மருதம் அமைப்பு, எழுத்தாளர் இரவி கார்த்திகேயன், முனைவர் சற்குணம், கவிஞர் அறிவுமதி, இயக்குநர் எழில் பெரியவேடி, கவிஞர் முத்துவேல் இராமமூர்த்தி, மருதம் அமைப்பின் தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்!

வாழ்நாளின் இறுதிவரை எவ்வித சமரசமுமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை அவர்களது சமூக பொருளாதார அரசியலை அசல் அழகியலோடு தனது படைப்புகளில் அப்பட்டமாய் தொலியுரித்தவர் விழி.பா.இதயவேந்தன். இலக்கியத்தில் மரபு மீறலையும் கட்டுடைப்புகளையும் நிகழ்த்திய முன்னவர்களில் முக்கிய ஆளுமையான விழி.பா. இதயவேந்தன் அவர்களின் பெயரிலான இவ்விருதை விழுப்புரம் நிலத்தில் பெற்றதை பெரும்பேறாகவும், மிகுந்த பொறுப்புணர்வாகவும் உணர்கிறேன்.

சால்ட் பதிப்பகம், எப்போதும் ஊக்கமளித்து அரவணைக்கும் எழுத்தாளர் நரன் அண்ணன் மற்றும் எல்லோருக்கும் மனமார்ந்த நன்றியும் அன்பும்!


உழவர் திருநாள்
ஜனவரி 15, 2025 
புதன், மாலை

Comments