பேராசிரியர் கல்யாணி அய்யா • கொடுக்கு சிறுகதைகள் • கங்கு நாவல்

பெரும் மதிப்பிற்கும் அன்பிற்குமுரிய பேராசிரியர் கல்யாணி அய்யாவுடனான சந்திப்பின் போது எனது 'கொடுக்கு' சிறுகதைத் தொகுப்பை வழங்கிய தருணம்!

பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஒருங்கிணைப்பாளராக, மனித உரிமை செயற்பாட்டாளராக, கல்வியாளராக தனது வாழ்நாளை சமூகப் பணிக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் கல்யாணி அய்யாவின் அசாதராண களப்பயணம் எவ்வித சமரசமுமற்றது. சில தினங்களுக்கு முன்பு 'கங்கு' நாவலை வாசித்துவிட்டு அழைத்திருந்தார். நாவல் குறித்து அய்யா பகிர்ந்துகொண்ட விரிவான, ஆழமான கருத்துகள் மிகுந்த மகிழ்ச்சியை நம்பிக்கையினை அளித்தது. அதற்குப் பிறகு நாவலை மறுவாசிப்பு செய்துவிட்டு மீண்டும் தன்னுடைய வாசிப்பனுபவத்தை கல்யாணி அய்யா முன்வைத்தது மட்டுமின்றி தனது சொந்த செலவில் 'கங்கு' பிரதிகளை வாங்கி உற்சாகத்துடன் மக்களிடம் கொண்டு சேர்த்தார். மகிழ்ச்சியைத் தாண்டி கூடுதல் பொறுப்புணர்வும் மேலிட மனம் நெகிழ்ந்தேன்.

'கங்கு' நாவல் குறித்தும் படைப்புலகம் குறித்தும் கல்யாணி அய்யா சொல்லிய ஒவ்வொரு சொல்லையும் வாழ்நாளுக்கான ஆகப்பெரும் அங்கீகாரமாக கருதுகிறேன். பேராசிரியர் கல்யாணி அய்யாவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்!

❤🌻📝

Comments