சாகித்ய அகாடமி - தென்னிந்திய இளம் எழுத்தாளர்கள் திருவிழா
சாகித்ய அகாடமி, தெலுங்கானா அரசின் மொழி & கலாச்சார துறை இணைந்து ஹைதராபாத்தில் நடத்திய 'தென்னிந்திய இளம் எழுத்தாளர்கள் திருவிழா'வில் தமிழ் மொழியின் சார்பாக கலந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி! எனது 'கொடுக்கு' சிறுகதைத் தொகுப்பிலிருந்து 'மர' கதையினை நிகழ்வில் வாசித்தேன். மறைந்த எழுத்தாளர் பூமணி அய்யாவுக்கு 'மர'யை தளுகையாக வைத்தேன்.
பஞ்சாரா, கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொடவா, மலையாளி, துளு மொழிகளில் வாசிக்கப்பட்ட கதைகள், கவிதைகள் பேரனுபவத்தை கொடுத்தன. ஒவ்வொரு படைப்புக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசிக்கப்பட்டது.
நிகழ்ச்சி நடந்த ரவீந்திர பாரதி வளாகத்தில் பிறமொழி படைப்பாளர்களுடனான கலந்துரையாடல் தருணங்கள் மிக இனிமையாக அமைந்தது.
கதையின் கருப்பொருள், வடிவம், சொல்லப்பட்ட முறை என 'மர' எல்லோராலும் பாராட்டப்பட்டதும், 'மர'யை மற்ற மொழிகளுக்கு மொழிபெயர்க்க ஆர்வம் காட்டியதும் பெரும் உற்சாகத்தை தந்தது.
சாகித்ய அகாடமிக்கு மனமார்ந்த நன்றிகள்!
Comments
Post a Comment