The Craft of Writing: Techniques and Approaches
சென்னை, A.M JAIN கல்லூரியின் நாளந்தா நூலக 'வாசிப்பு வட்டத்தை' துவக்கி வைத்து, அக்கல்லூரி மாணவர் காக்கை சரண் எழுதிய 'மனக்கூராய்வு' கவிதைத் தொகுப்பை வெளியிட்டதில் மிக்க மகிழ்ச்சி. கல்லூரியின் பல்வேறு துறையைச் சேர்ந்த நூறுக்கும் மேலான மாணவ மாணவிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் 'The Craft of Writing: Techniques and Approaches' என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினேன். மாணவர்களின் கேள்விகளும் ஆர்வமும் நம்பிக்கையாக இருந்தது. எனது படைப்புகளை வாசித்துவிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி. அழகியலாகவும், அதிநவீன தொழில்நுட்பத்துடனும் கல்லூரி நூலகம் சிறப்பாக இயங்குகிறது. அருமையானதொரு நிகழ்வை ஒருங்கிணைத்த கல்லூரி நிர்வாகம், வாசிப்பு வட்டம் பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளும் அன்பும்! 💜🌻📝 ஆகஸ்ட் 27, 2026